தாமிரபரணி ஆற்றை நேசித்து அதனுடைய இயற்கை வளத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமித்து இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் குறிப்பாக புதர்களாக மண்டிக்கிடந்த சீமைக்கருவேல மரங்கள் மற்றும் அமலசெடிகள் மேலும் பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமிரபரணியை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்ட மாமனிதரை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.
பல்வேறு கழிவுகளால் மாசுபட்டு கிடந்த தாமிரபரணி நதியை தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை இணைத்து அரசு அதிகாரிகள் துணையோடு பாதுகாத்த ஒரு மாமனிதர் சத்திநாதன் அவர்கள்.
அனைவரோடும் இன்முகத்தோடு பழகக் கூடிய பண்பாளர்.இயற்கையை பாதுகாப்பதில் அவருக்கு இருந்த எண்ணங்கள் நிறைவேற ,அவரின் நினைவாக தொடர்ந்து தாமிரபரணி நதியை பாதுகாக்க உறுதி ஏற்ப்போம். அன்புடன் ஜெயபாலன் எம்.எ, டி.பி.டி (தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்).


