செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1350 பேர் பங்கேற்றனர்.
சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல் துறையின் சார்பில் நடந்த தேர்வில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1350 பேர் பங்கேற்றனர். லோயர் பிரிவில் 5 பிரிவாக 929 பேருக்கும், ஹையர் பிரிவில் 4 பிரிவாக 414 பேருக்கும் தேர்வு நடந்தது.
தேர்வினை தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி மூத்த விரியுரையாளர் ஃபென் மேத்யூ பணியாற்றினார். துணை தலைமை கண்காணிப்பாளராக இயந்திரவியல் துறை தலைவர் ஆறுமுகசேகர் பணியாற்றினார்.
தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி விரிவுரையாளர்கள் ஜான் பால், கனிமொழி, பிரசன்னா, வைத்த மாநிதி பெருமாள், மாரி ராஜ்குமார், கெளரிசங்கர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கண்ணன், கல்யாணி, காந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர் டாக்டர் ஆவுடையப்பன் வழிகாட்டுதலில், கல்லூரி தாளாளர் உயர்திரு. டாக்டர் ஸ்டீபன் தலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


