மனித வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிப்பது நீர் உடல் நலத்தைக் காக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரைப் பருக வேண்டும் என்கிறார்கள். ஆனால் போதிய நீர் கிடைக்காமல் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையாலும் நீர் மூலம் பரவும், நோய்களாலும், உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் மரணமடைகிறார்கள். உலகில் ஜந்தில் ஒரு பங்கு மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப் படுகிறார்கள். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நிலைமை படுமோசம். சாதாரணமாக மருத்து வமனைக்கு வரும் நோயாளிகளில் 10 முதல் 15 சதவீத நோயாளிகளின் தண்ணீரால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக் கிறார்கள். ஒரு நாட்டின் சுகாதார நிலைமையை அந்த நாட்டின் எவ்வளவு சதவீத மக்கள் சுத்தமான குடிநீரை பயன்படுத்துகின்றனர் என்பதை வைத்து கணக் கிடப்படுகிறது. உலகம் முழுவதும் கிடைக்கும் மொத்த நீரில் மனிதன் குடிப்பதற்கு ஏற்ற நீரின் அளவு மிக மிகக்குறைவே அதாவது 0.01 சதவீத நீரே குடிப்பதற்கு சிறந்ததாக இருக்கிறது. 2025ம் ஆண்டில் உலக மக்கள் தொகை மேலும் கூடும்போது 25 சதவீத மக்கள் மிகமோசமான குடிநீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்ச அளவு நீரின் தேவை ஆண்டிற்கு 500 கன மீட்டராக இருக்கிறது. இது ஒரு நாளைக்கு என்று கணக்கிட்டால் 1370 லிட்டர் நீருக்குச் சமம். இதுவே ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 22 நாடுகளில் கிடைக்கும். நீரின் அளவு நபர் ஒன்றிற்கு ஆயிரம் கன மீட்டருக்கும் குறைவே இதற்கு மாறாக உலகில் மிக அதிக அளவு நீர் கிடைக்கும் நாடாக ஜஸ்லாந்து உள்ளது. இங்கு தண்ணீர் ஒரு நபருக்கு ஆண்டிற்கு ஆறு லட்சம் கன மீட்டர் கிடைக்கிறது. இந்தியாவில் இது 1244 கன மீட்டராகும் உலகில் சராசரியாக ஒரு நபருக்கு 7,122 கன மீட்டர் நீர் கிடைக்கிறது. மெதுவாக வளர்ச்சிடைந்த நாடுகளைவிட வளரும் நாடுகளே நீரின்றித் தவிக்கின்றன. அதற்குக் காரணம் வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகைப் பொருக்கம் கட்டுப்படுத்தப் படாமல் இருக்கிறது. இருந்த போதிலும் நாட்டின் பெரும் பாலான அணைகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. இன்றும் இந்தியாவின் நூற்றுக் கணக்கான கிராமங்களில் குடிநீர் கிடைப்பதில்லை . நகர்ப்புற மக்களில் 80 சதவீத மக்கள் மட்டுமே போதுமான அளவு குடிநீர் பெறுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் உள்ள அனைவரையும் பெரிதும் கவலையடைய செய்வது காலநிலை மாற்றமும், புவிவெப்பமும், அதிகரித்துவரும் தொழிற் சாலைகளும், வாகனங்களும் தான் காரணமாக இருக்கிறது. காடுகளின் அளவு குறைவதும், மரங்கள் அழிந்து வருவதும் தான் புவிவெப்பத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில். மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படுகின்ற பட்டியலில் உள்ள நாடுகளில் உள்ள மக்களுக்கு வருகின்ற நோய்களுக்கு முக்கியமான முதல் காரணம் சுத்தமற்ற குடிநீர் தான் என்று சொல்லியிருக்கிறது இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பிறகு வந்த எந்த அரசாங்கமும் மக்களுக்கு மிக அத்தியாவசியமான சுத்தமான குடிநீரைத் தடையின்றி வழங்க நிரந்தரமானதொரு திட்டத்தைத் தீட்டவே இல்லை. இனி ஒரு சுதந்திரப்போராட்டம் நீருக்காக உருவாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களிடம் நம் நாட்டுத் தண்ணீரையே நாம் விலை கொடுத்து வாங்குவதற்கு நிலைவந்துவிட்டது. இதற்கு காரணம் யார்? நிலத்தடி நீரைப் பெருக்காமல், நிலத்தடி நீரைத் துளைபோட்டு போட்டு போட்டு உறிஞ்சுகிறோம்.
தற்போது ஆண்டுதோறும் 1. சதவீதம் புவிவெப்பம் அதிகரித்து வருகிறது. இது வரும் 2020 ல் 5 டிகிரியாக உயரும் என கால நிலைக்கான சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படி புவிவெப்பம் அதிகரித்துக் கொண்டே சென்றால் காலநிலையிலும், பருவநிலையிலும் அடிக்கடி மாற்றம் ஏற்படும். இதனால் சில இடங்களில் அதிக வெப்ப நிலை ஏற்படும். புயல், நிலநடுக்கம் போன்றவையும் ஏற்படும். சில நாடுகளில் கடற்கரையோர பகுதிகள் மூழ்கும் அபாயமும் ஏற்படும். குறிப்பாக தென்மேற்கு அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்காவில் அதிகம் பாதிப்பு இருக்கலாம் என என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலைகள், அனல் மின்நிலையங்களில் இருந்து வெளிவரும் நச்சுவாயுகளை, மறுசுழற்சி முறையில் மாற்றம் செய்து பயனுள்ள அமிலங்களாக மாற்றலாம். பருவகால மழை அளவு மாறி வருவதால், ஏற்றவாறு விவசாயம் செய்வது அவசியமாகும்.இதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அந்தந்த ஆண்டின் மழையின் நிலவரத்தை வெளியிடுகின்றனர். மேலும் ஜூலை மாதத்தில் புதிய நிலவரத்தையும் அறிவிக்கின்றனர். இதைக் கொண்டு எவ்வாறு பயிர் செய்ய வேண்டுமென மத்திய வேளாண்மைத் துறை அறிவித்து வருகிறது. விவசாயத்துறையை மீட்கப் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காவிட்டால், உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். சொட்டு நீர்ப்பாசனம் குறித்து தற்போதுதான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்குத் தமிழக அரசும் மானியம் வழங்கிறது. விவசாயிகளுக்கு என்று ஒன்றியங்கள் தோறும், பருவகால மாற்றத்தில் எவ்வாறு விவசாயம் செய்வது, காலத்திற்கு ஏற்ற பயிர்களைத் தேர்ந்தெடுப்பது நவீன கருவிகள் புகுத்துதல் உள்ளிட்டவை குறித்துப் விழிப்புணர்வை அளிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என எழுத்தாளர் பொருநை புதல்வன் காஜா முகைதீன் எழுதியிருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. எதிர்காலத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம். தாமிரபரணியை காக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம்?.
(நதி வற்றாமல் ஓடும்)


