இன்றைய தினத்தந்தி புத்தக மதிப்புரையில் நான் எழுதி உலக களரி அடிமுறை கூட்டமைப்பு(அமெரிக்கா) கலரில் வெளியிட்ட களரி அடிமுறை -1 என்ற நூல் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினத்தந்தி நிர்வாகத்துக்கும், ஆசிரியர் குழுவிற்கும் நன்றி . நூல் வேண்டுவோர் 7010180719, 8760970002 ஆகிய எண்களில் தொடர்ப்பு கொள்ளவும். -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
களரி அடிமுறை -1
பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய களரி என்ற ஆயுதத்தின் பிறப்பிடம் கேரளா என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கலரின் பிறப்பிடம் தமிழகம் என்பதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிறுவி இருக்கிறது. கலர் யை உலக முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட களரி அறிவுரை உலகக் கூட்டமைப்பு சார்பாக இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந் நூலின் ஆசிரியர் கலர் ஆசான்கள் நிறைந்த குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று களரி ஆசான்கள் பலரிடம் பேசி அறிய தகவல்களை திரட்டி இந்த நூலில் தந்து இருக்கிறார் களரி அடிமுறை என்றால் என்ன, அதன் பிறப்பிடம், அந்த கலையின் நுணுக்கங்கள், பிற்காலத்தில் வீழ்ச்சியடைந்த களரியின் பெருமையும் மீட்டெடுக்க நடைபெறும் முயற்சிகள் ஆகிய அனைத்தையும் இந்த நூல் தெளிவாக தருகிறது. ( ஆசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு, வெளியீடு:- உலக களரி அடிமுறை கூட்டமைப்பு, விலை- 299, செல்போன் – 7010180719


