கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் சத்துணவு ஆ சிதம்பரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆ. செல்வி , பி. பாக்கியம் லீலா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்னலட்சுமி சின்னத்துரை, வசந்தி முருகேசன், பொன் ராணி கந்தசாமி, சுந்தரி குமார் , சுப்புலட்சுமி பேச்சிமுத்து, முத்துராமலிங்கம் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அலுவலக தூய்மை பணியாளர்கள் பார்வதி , கற்பகம் இரவு காவலர் அந்தோணி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டனர். . அனைத்து ஒன்றிய குழு கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் . அன்னலட்சுமி சின்னத்துரை . சுப்புலட்சுமி பேச்சி முத்து. ஆகியோருக்கு ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


