ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை திட்டத்தின் கீழ் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கு தேவையின் அடிப்படையில் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்க்கான தகவல்களை பல்வேறு தொழிநுட்பங்கள் வாயிலாக அளித்து வருகிறது. கால்நடை வளர்ப்பில் பெண்களின் பங்கு அதிகமாக காணப்படுகிறது. கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாத்து இலாபகரமாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆடியோ கான்பாரன்ஸ் மூலம் நாயக்கர்பட்டி கிராமத்தில் நடத்தியது. சுயஉதவி குழுக்களை சார்ந்த சுமார் 40 பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கால்நடைத்துறையை சார்ந்த கால்நடை மருத்துவர் அந்தோணிராஜ் அவர்கள் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மரி ஆடுகள், மற்றும் கோழிகளுக்கு வரும் பருவகால நோய்கள் குறித்தும் அதிலிருந்து அவைகளை பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தார். மற்றும், மடிவீக்க நோயிலிருந்து கறவை மாடுகளை பாதுகாப்பது, உண்ணிகளை தவிர்த்தல், உணவு மேலாண்மை, தடுப்பு ஊசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


