நம் பாரத இந்திய தேசத்தின் 74 வது குடியரசு தின விழா காயல்பட்டினம் அருகே ஓடக்கரையில் உள்ள அங்காடி மையத்தில் வைத்து நடைபெற்றது.விழாவிற்கு வருகை தந்தவர்களை ஓடக்கரை அங்கன்வாடி மைய பணியாளர் முத்துலட்சுமி வரவேற்றார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, காயல்பட்டினம் நகராட்சி 17 வது வார்டு கவுன்சிலர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் குழந்தைகள் கன்னிஷ்கா, மூசா, முகமது அம்சா, முகமது அப்துல்லா, சாதனாஸ்ரீ, தனுஷாஸ்ரீ ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். இதில் மதர் மகளிர் சுய உதவி குழு பெண்கள், மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் உழவர்ஆர்வலர் குழு நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தை பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஓடக்கரை அங்கன்வாடி மைய உதவியாளர் வளர்மதி நன்றி கூறினார். போட்டோ செய்தி : காயல்பட்டிணம் ஓடக்கரை அங்கன்வாடி மையத்தில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்


