கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் குருவி. இவரது மனைவி பாத்திமா என்ற காவ்யா(30). இவர் மனநிலை பாதிககப்பட்டவர். கடந்த 6 மாத காலமாக திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடைகளில் புகுந்து கிடைத்த பொருள்களை தூக்கில் சென்று விடுவார். இதனால் இவர் பஜாரில் சென்றாலே கடைகாரர்கள் பயந்தனர். இவர் மேக்கப் பையித்தியமாகவும் இருந்தார். இதனால் பல பகுதியில் வீடு புகுந்து துணிகளை அள்ளி சென்றார்.
கடைகளில் புகுந்து அங்கு கிடைக்கும் பொருள்களை தூக்கி சென்றதால் இவர் மீது போலீஸ் நிலையில் பலர் புகார் செய்தனர். ஆனாலும் மனநிலை பாதிகப்பட்ட பெண்ணை என்ன செய்வது என்று தெரியாமல் போலிசார் தவித்து வந்தனர். இதற்கிடையில் இன்று காலை கருங்குளம் காமராஜர்தெருவுக்கு அருகில் உள்ள குளத்தில் காவ்யா குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா சம்பவ இடத்துக்கு சென்றார்.
காவ்யாவின் உடல் குளத்துக்குள் கிடந்த காரணத்தினால் அதை கைபற்ற இயலவில்லை. அதன் பின் போலிசார், பொதுமக்கள் இணைந்த காவ்யா உடலை கரைககு கொண்டு வந்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவ்யாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மனநிலை பாதிகப்பட்ட பெண் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


