செய்துங்கநல்லூரில் டிஎஸ்பி தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல்நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபபிள்ளை, அன்னராஜ், ராமகிருஷ்ணன், மேரி ஜெமிதா, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டிஎஸ்பி மாயவன் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களிடம் எப்படி காவல்கள் பழக வேண்டும், குற்றவாளிகளை எப்படி கையாளவேண்டும் என்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து ஸ்மார்ட் காவலர் ஆப்பை காவலர்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனை சிசிடிஎன்எஸ் எஸ்எஸ்ஐ சந்தனராஜ், தலைமை காவலர் அருள் ஆகியோர் விளக்கமளித்தனர்.


