காயல்பட்டினத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் வினி (36). மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர்(34). இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரிஸான் (12) என்ற மகன் உள்ளான். ஜெனிபர் கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிபட்டு வந்தாராம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் வினி கடற்கரைக்கு சென்றுள்ளார். மகன் பள்ளிக்கூடத்துக்கு சென்ற நிலையில், ஜெனிபர், அருகில் உள்ள தாய் மோட்ச ராணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென வீட்டிலிருந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், அக்கம் பக்கத்தினர் துணையுடன் தீயை அணைத்துள்ளார்.
பின்னர் பலத்த காயங்களுடன் இருந்த ஜெனீபரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரை உடலை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


