ஆறுமுகநேரியில் மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 7 கிலோ 875 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் இன்று ஆறுமுகநேரி காணியாளர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியில் உள்ள சாமுவேல் மகன் ராஜதுரை (48) என்பவரது மளிகை கடையை சோதனை செய்த போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் இராஜதுரையை கைது செய்து அவரிடமிருந்த 7 கிலோ 875 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


