தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 1055 மனை உரிமையாளர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1992 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்துள்ள சங்கரப்பேரி கிராமம்,சர்வே எண் 101, 102, 103, 104 பாகம் மற்றும் 105 பாகம் ஆகிய நம்பர்களில் உள்ள எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள 1055 மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு தமிழக முதல்வர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனுக் கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை.
தமிழ் நிலம் மென்பொருள் தொகுப்பில் மேற்கண்ட நிலங்கள் குப்பை குவியல் அரசு நிலம் என்றே இருப்பதால் பொது மக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்கு பத்திரப் பதிவு செய்ய ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் விரைந்து நடவடிக்கை எடுத்து 1055 மனை உரிமையாளர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவ சங்கர ராமன் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.


