
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக கருங்கல் எடுத்துச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியின் ஓட்டுநரான முகேஷ் (22) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து டாரஸ் லாரியும், 4.8 டன் கருங்கல்லும் பறிமுதல் செய்யப்பட்டது.