ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராம உதவியாளர் நேற்று கிராம ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஸ்ரீவைகுண்டம் கீழசன்னதி தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் காசி (எ) காசிராமன் (22) என்பவர் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையை சேதப்படுத்தி 30 பைகளில் ஆற்றுமணல் திருடியது தெரியவந்தது.இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து காசி (எ) காசிராமனை கைது செய்தார்.மேலும் கைது செய்யப்பட்ட எதிரி காசி (எ) காசிராமன் என்பவர் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 2 வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


