சங்கரலிங்கபுரத்தில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றதால், கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் இன்னாச்சி முத்து மகன் மில்டன் (30), பெயிண்டர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி பிரேமா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளுடன் அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் கொத்தன்குளத்திற்கு சென்றுவிட்டார்.
இதனால் மன வேதனையில் இருந்த மில்டன் நேற்று இரவு 9மணியளவில் மது அருந்திவிட்டு தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து சேலையால் பேனில் தூக்கு மாட்டி தான் சாகப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் அவரது மனைவி உடனே பக்கத்து வீட்டினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மில்டன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர் வந்து பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


