திருச்செந்தூரில் பேருந்து டெப்போ ஊழியர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (56). இவர் திருச்செந்தூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் பேருந்துகளுக்கு டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


