செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் விவசாய முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், அஸ்ஸாம் அரசை கண்டித்தும், நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஸ்ரீவைகுண்டம் பகுதி செயலாளர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ மாவட்ட துணைத்தலைவர் உஸ்மான், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல்காதர் கண்டன உரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


