தெய்வச்செயல்புரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி அடிப்படையிலான பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிறு வகைகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி தெய்வச்செயல்புரம் கிராமத்தில் இன்று நடந்தது.
தூத்தக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் பயிற்சிக்கு தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) தமிழ்மலர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஜெயசெல்வின் இன்பராஜ் உழவர் பயிற்சி நிலைய திட்டங்களை எடுத்துத்துரைத்தார். மேலும் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் கருங்குளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வாகைக்குளம் வேளாண் அறிவியல் மைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முருகன் பயிறு வகை பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஆகிய பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஆலோசகர் கண்ணன் கலந்துகொண்டு தொழில்நுட்ப உரையாற்றினார்.
கருங்குளம் வட்டார வேளாண்மை அலுவலர் காயத்ரி பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கி பேசினார். பயிற்சியின் முடிவில் துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார். விவசாயிகள் 30 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை தெய்வச்செயல்புரம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் திருவேணி செய்திருந்தார்.


