முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளை பெற்ற அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. இதையொட்டி திங்கள் கிழமை மாலை குடியழப்பு நடந்தது. இரவு அம்மனுக்கு மாககாப்பு சாத்தப்பட்டது. மறு நாள் காலை 11 மணிக்கு பால்குடம் எடுத்து ஊர் சுற்றி வந்தது. அதன் பின் மணக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. மதியம் அபிசகேம், அலங்காரம் ஆதாரனை நடந்தது. மாலை 4 மணிக்கு மணக்கரையில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரப்பட்டடது. பின் முத்தாலங்குறிச்சி வீதிகளின் அம்மன் உலா வந்தார். தொடர்ந்து இரவு நேர்ச்சைகள் வழங்கப்பட்டது. அதன் பின் மதுகுடம் பொங்குதல் என்னும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் பட்டாசு வெடிக்க கிளம்பி வந்தார். பின் கிராமங்களில் மக்களிடையே அருளாசி வழங்கப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை காலை சப்பரம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது அங்கு சிறப்பு பூஜையுடன் கொடை விழா இனிதே முடிந்தது.இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.


