உமரிக்காடு தாமிபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு அமைச்சர் 1 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள உமரிக்காட்டைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கௌரி. மன நலம் பாதிக்கப்பட்டவர். காமராஜ் இறந்து விட்டார். இவருக்கு சேவாக் என்ற 13 வயது மகன் உள்ளார்.
சேவாக் நேற்று உமரிக்காடு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இன்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று சேவாக்கின் தாயார் கௌரியிடம் ஆறுதல் கூறினார். மேலும் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். அவருடன் மாநில மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், ஏரல் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் கட்சியினர் உடன் வந்திருந்தனர்.