முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாட்டார்குளம் ஆர்.சி. பங்குக்கு உட்பட்ட முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயம் மிகவும் பழமையானது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் திருவிழா இன்று துவங்கியது. இதையட்டி மாலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டது. செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜாக்சன் தலைமை வகித்தார். அதன் பின் திருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது. வருகிற 27 ந்«தி காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருப்பலிக்கு இராதாபுரம் பங்குத்தந்தை அருட்பணி ராபின் ஸ்டான்லி தலைமை வகிக்கிறார். தூத்துக்குடி புனித தாமஸ் ஆங்கிலப்பள்ளி அருட்பணி இன்பெண்ட் மறையுரை யாற்றினார். இந்த நிகழ்ச்சிகளில் கருங்குளம் திரு இருதயசபை அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். இதற்கான ஏ-ற்பாடுகளை நாட்டார்குளம் பங்கு தந்தை அருட்பணி அம்பு ரோஸ் பெட்ரோணி தலைமையில் முத்தாலங்குறிச்சி இறைமக்கள் செய்திருந்தனர்.