தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் டெல்லியில் தேசிய விருதைப் பெற்றார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலின்போது சிறப்பாக செயல்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு உள்ளிட்டவர்கள் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று 12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ்-க்கு விருதை வழங்கினார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.