கீழவல்லநாட்டில் காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழவல்லநாடு அருகேயுள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்றது.
சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் தலைமையில் முகாம் நடைபெற்றது.
தொழிற் சாலையின் பார்ட்னர்சரவணன் முகாமினை துவக்கி வைத்தார்கள்.
நலக்கல்வியாளர்முத்துகுமார் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் ச.இசக்கி மஹாராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சி அதிகாரியுமான டாக்டர்.ஹரிஹர மஹாதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். இம்முகாமில் 55 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிருஷ்டி, சுகாதார பார்வையாளர்முத்துலட்சுமி, முத்துவேல், தொழிற்சாலை தயாரிப்பு மேலாளர் கேசவன், கண்காணிப்பாளர்புவனேஷ்வரி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவப் பிரிவு ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


