தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் டிஜிட்டல் சிக்னல் விநியோகிஸ்தர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அரசு டிஜிட்டல் சிக்னல் விநியோகிஸ்தர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரிய சேர்மன் ஜீவா மற்றும் பொது மேலாளர் (இயக்கம்) துரை தலைமையில் நடந்தது. மாவட்ட கேபிள் டிவி நிறுவன தனி வட்டாட்சியர் ராஜலட்சுமி வரவேற்றார்.
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவர் ஜீவா சிறப்புரையாற்றி ஆபரேட்டர்களுக்கு அரசின் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை வழங்கினார். இதில் சென்னை தலைமை அலுவலக துணை மேலாளர் சுரேஷ், தொழில் நுட்ப உதவியாளர் விக்னேஷ், உட்பட தூத்துக்குடி வட்டத்தில் உள்ள அரசு டிஜிட்டல் சிக்னல் விநியோகிஸ்தர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.


