தூத்துக்குடியில் ஜேசிஐ பெம் ஸ்டார்ஸ் அமைப்பின் சார்பில் “உணவை வீணாக்காதீர்” (Stop Food Waste) என்ற திட்டத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் முதல் முறையாக கல்யாண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் மீதம் ஆகும் உணவினை சேகரித்து பசியோடு இருப்பவர்களுக்கு வழங்கும் “உணவை வீணாக்காதீர்” (Stop Food Waste) என்ற சிறந்த திட்டதினை ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ் அமைப்பினர் முன்னெடுத்து உள்ளனர்.
இதன்படி அனைத்து மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் உணவினை கொடுக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கொண்ட போஸ்டர் ஒட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். ஜேசிஐ பெம் ஸ்டார்ஸ் தலைவர் பிரைனா பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.


