தாமிரபரணி கரையில் ஐந்தாம் கட்டமாமக பனை விதைக்கும்பணி துவங்கியது. தாசில்தார் தாஹிர் அஹ்மது துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் பனை விதை விதைப்பு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. தாமிரபரணியில் முள்செடி அகற்றும் பணியை கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் லெட்சுமி பதி தலைமையில் கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். எக்ஸ்னரோ வாடகை இல்லா இயந்திரம் மூலம் இந்த பணி நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை மாடல் தாமிரபரணியாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது, இதன்படி ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி, ஆழ்வார்திருநகரி பேரூராட்சியுடன் இணைந்து முள்செடி அகற்றும் பணி நடந்தது. மேல ஆழ்வார்தோப்பு கிராமஉதயம் தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் 2 லட்சம் பனை விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தொடர்ந்து நான்கு கட்டமாக பணி நடந்தது. ஆழ்வார்திருநகரியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலும், ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா தலைமையிலும் கோட்டாட்சியர் பிரபு , பொன்னன்குறிச்சியில் திட்ட இயக்குனர் ஐஸ்வர்யா தலைமையிலும் நடந்தது. இதைதொடர்ந்து பனை விதை விதைத்தல் மற்றும் மரக்கன்று நடப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் உள்ள வெள்ளூர் வடிகால் கரை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹிர் அஹ்மது மற்றும் உதவி பொறியாளர் சதீஸ் ஆகியோரின் ஏற்பாடில் முள் அகற்றும் பணி நடந்தது. அதன் பின் 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி கரை பகுதியில் துவங்கியது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார். ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாசில்தார் தாஹிர் அஹ்மத் பனை விதைகள் விதைத்து துவக்கி வைத்தார். ஊடகவியலாளர் வெற்றி, பா.ம.க சுப்பிரமணியன், பாசன உதவியாளர் முத்துராமலிங்கம், கிராம உதயம் பகுதி அலுவலர் கண்ணன், செல்வம், மணி, ஜெயராமன் , ஜே.சி.பி.ஆபரேட்டர் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம உதயம் பகுதி அலுவலர் ஆனந்த் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து செய்திருந்தது.


