கயத்தாறு அருகே இரட்டை கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 25.11.2025 அன்று நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (62)என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று கயத்தாறு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


