மதுரை குறிஞ்சிக்கூடல் வரலாற்று அமைப்பு 68 வது வரலாற்றுப் பயணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தந்தனர். இந்த குழுவில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் குடும்பத்தினை சேர்ந்த 40 பேர் பயணித்தனர். இந்த பயணத்தில் இவர்கள் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம், கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களை பார்வையிட்டனர். இந்த குழுவிற்கு குறிஞ்சிக்கூடல் அமைப்பாளர் வழக்கறிஞர் பெ.கனகவேல் தலைமை வகித்தார். ஆதிச்சநல்லூரில் நடந்த தொல்லியல் கருத்தரங்கில் இந்த குழுவினர் கலந்துகொண்டனர். அங்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு ஆதிச்சநல்லூர் குறித்து பேசினார். தொல்லியல் ஆய்வு மாணவர்கள் ராஜேஷ், அருண்குமார், சங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்த குழுவினர் ஆதிச்சநல்லூர் பி சைட் மற்றும் சி சைட்டை பார்வையிட்டனர். அதன் பின் கிருஷ்ணாபுரம் கோயில் சென்று அங்கே கலை சிற்பங்களை பார்வையிட்டனர். இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், நாகலிங்கம், பழனியாண்டி, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.