தூத்துக்குடி மாவட்டம். திருவைகுண்டம் வட்டம். கருங்குளம் ஊராட்சி ஒன்றியம். ஆறாம்பண்ணைஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சா.சேக் அப்துல் காதர் தலைமை தாங்கினார் .ஊராட்சி செயலாளர் ஹரிஹரசுந்தரம் வரவேற்றார் இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டதுமற்றும்போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. மற்றும் மழைக்காலம் என்பதால் ஆறாம் பண்ணை ஊராட்சியில் சுத்தமாக வைத்திருப்பது என உறுதிமொழி இயக்கப்பட்டது. தாமிரபரணி நதிக்கரையை ஆறாம் பண்ணையில் தடுப்பு சுவர் அமைத்து தரச் சொல்லி பொதுப்பணி துறையை கேட்டுக்கொள்ளப்பட்டது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த விவசாயத்துக்கு பயணம் பண்ணக்கூடிய பாசன கால்வாயை சீரமைத்து விவசாயத்துக்கு பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணி துறையை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ரோட்டிற்கு மேற்கே உள்ள பாசன கால்வாய் கவரையும் தூர்வாரி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணி துறையை கேட்டுக் கொண்டுள்ளோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில்மக்கள் நல பணியாளர்அருணாசலம்.பணித்தள பொறுப்பாளர் ஜீவா முறப்பநாடு காவல் நிலையம்காவலாளர் திருமதி ராமலட்சுமி. முகமது அலி ஜின்னா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


