சாமிதோப்பு அன்புவனத்தில் வைகுண்டரும், வாழ்வியலும் என்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் மற்றும் கவிஞன் பதிப்பகமும் இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கம் மற்றும் வைகுண்டரும், வாழ்வியலும் என்னும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மகாகுரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். கவிஞர் முத்துலிங்கம் இறைவணக்கம் பாடினார் தமிழ்நாடு கலை இலக்கிய கழகச் செயலர் முனைவர் முகிலை பாஸ்ரீ வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் தமிழன் இளங்கோ, பேராசிரியர் அப்துல் சமது, தமிழ்ச்சோலை அமைப்பின் தலைவர் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். பால பிரஜாபதி அடிகளார் வெளியிட்ட வைகுண்டரும், வாழ்வியலும் என்னும் புத்தகத்தை திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஓம் முத்தையா பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழ்நாடு கலை இலக்கிய கழகத் தலைவர் ஈஸ்வரன், நாஞ்சில் கலையகம் மயூரி சீதாராமன், முனைவர் செல்வராஜன், ஈஸ்வரன், பேராசிரியர் ஸ்ரீமதி ஆகியோர் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
நிகழ்ச்சிகளை கவிதாயினி விஜி பூரண்சிங் தொகுத்தார். நூல்ஆசிரியர்கள் கவிஞர் பா ஸ்ரீ, பேராசிரியர் ஆர் தர்மரஜினி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி நன்றி கூறினார்.


