தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை சார்பில் ரூ.1கோடியே 45 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தை ரூ. 1கோடியே 45 லட்சம் செலவில் அதிநவீன வசதியுடன் நீச்சல் குளம் புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் நவீன வசதியுடன் உடை மாற்றம் அறைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாலி எஸ் நாயர் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நீச்சல் குளத்தை திறந்து வைத்து நீச்சல் போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எம் முத்தையா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெய ரத்தின ராஜன், திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


