தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த 17வயது மாணவன் இசக்கிமுத்து. இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி ஜிம்முக்கு சென்று விளையாடிவிட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் இன்றைய தினம் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்.


