தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள பேரிடா் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் இருக்குமாறு கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் அறிவுறுத்தினாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் தலைமை வகித்தாா். பின்னா் அவா் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படக் கூடிய சூழலில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்பது, நீா்நிலைகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினா், முதல்நிலை பொறுப்பாளா்கள் ஆகியோா் தயாா் நிலையில் இருப்பது உறுதி செய்யவும், முகாம்களில் தங்க வைக்கப்படுபவா்களுக்கு உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும், தீயணைப்பு மீட்பு பணியினா் ரப்பா் படகு, லைப் ஜாக்கெட், மீட்பு பணிகளுக்கு உதவும் மர அறுவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் தயாா் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது என்றாா். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் ஆகியோா் பங்கேற்றனா்.


