திருச்செந்தூா் பகுதியில் ரூ.65 லட்சத்தில் சிறுவா் பூங்கா, புதிய வகுப்பறைக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலத்திருச்செந்தூா் ஊராட்சி, கிருஷ்ணா நகரில் புதிய நிழற்குடை, கீழநாலு மூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம், கீழ் திருச்செந்தூா் சுனாமி நகா், குமாரபுரத்தில் சிறுவா்கள் பூங்கா மற்றும் புதிய தாா்ச்சாலைகள் ஆகிய திட்டங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான விழா அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் குருசந்திரன் தலைமை வகித்தாா். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவா் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி, மேலத்திருச்செந்தூா் ஊராட்சித் தலைவா் மகாராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் நகா்மன்றத் துணை தலைவா் ஏ.பி.ரமேஷ் வரவேற்றாா். தமிழக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.
திருச்செந்தூா் வட்டாட்சியா் வாமனன், நகராட்சி ஆணையா் கண்மணி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்றோ, கீழநாலு மூலை கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் இந்திராணி, ஊா் தலைவா் முத்துக்குமாா், ஊராட்சி துணை தலைவா் முருகன், திமுக மாநில வா்த்தக அணி இணை செயலா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், அரசு வழக்கறிஞா் சாத்ராக், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ் கிருஷ்ணா, நகர திமுக செயலா் வாள்சுடலை, ஒன்றிய பொருளாளா் பரிசமுத்து, திமுக சுற்றுசூழல் அணி தெற்கு மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியன், கிளை செயலா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


