சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி கிடைத்துள்ளது. பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை மேலே சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் அனுமதி தந்துள்ளனர்.


