ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து சிஐடியு சங்கத்தின் பணிமனை கிளை கமிட்டி கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு துணைத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மணிப்பூர் மற்றும் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களில் உயிரிழந்த பொதுமக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் நடந்து வரும் பணிகள் குறித்து பணிமனை செயலாளர் சிவசுப்பு பேசினார்.
மேல் கமிட்டி முடிவுகளை சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான் பேசினார். மத்திய சங்க பொருளாளர் குமரகுருபரன் நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில் கணேசன், ஆறுமுகம், உலகநாதன், சண்முகசுந்தரம், ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக செயல்பட உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 7 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ளவும், 15-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிலாக கூட்டம் மற்றும் பணிமனை பிரச்சனைகள் சம்பந்தமான வாயிற்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


