கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(60). இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் சேரகுளம் பஞ்சாயத்து தீராத்தி குளத்தில் உள்ளது. இங்கு இவர் வாழை மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவர் கிணற்றில் தினமும் சென்று தண்ணீர் இறைத்து வாழைத்தோட்டத்துக்கு பாய்ப்பது வழக்கம். கிணற்றில் தண்ணீர் குறைந்த காரணத்தினால் இரண்டு போர்வெல் போட்டு இருக்கிறார். அதில் ஒரு போல்வெல்லில் இன்று காலை அவர் தண்ணீர் பாய்க்கும் போது பால் போல தண்ணீர் வந்தது. அதிர்ந்த போன மற்ற போர்வெல்லில் தண்ணீரை பாய்த்த போது வேறு வித்தியாசம் தெரியவில்லை. உடனே பால்பாண்டி நாடார் , தனது கிணறு பக்கத்து கிணறுகளில் சென்று பார்த்த போது அந்த கிணற்றில் எந்த ஒரு கலர் மாற்றமும் தெரியவில்லை. இதனால் விவசாயி பால் பாண்டி பதட்டம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி பால்பாண்டி கூறும் போது, நான் கிட்டத்தட்ட 50 வருடமாக விவசாயம் பார்த்து வருகிறேன். என் கிணற்றில் தண்ணீர் பால் போல மாறவில்லை. தற்போது இந்த கிணற்றில் போடப்பட்ட ஒரு போல்வெல்லில் தண்ணீர் பால் போல மாறியிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பருவமழை பொய்த்து போன காரணத்தினால் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறோம். இந்த நிலையில் என் கிணற்றில் உள்ள போல்வெல்லில் தண்ணீர் இப்படி ஆகி விட்டதே என நினைக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. எனவே விவசாய துறையினர் எதனால் என் கிணற்றில் தண்ணீர் நிறம் மாறியுள்ளது என கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறினார்.
விவசாயி கோரிக்கையை விவசாய துறையினர் கண்டு கொள்ளவேண்டும். தண்ணீர் நிறம் மாற்றத்துக்கு காரணத்தினை கண்டு பிடிக்க வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சம் வருமா?
பெரும்பாலுமே பஞ்சம் வரும் அறிகுறி இருந்தால் நிலத்தடி நீர் பால் போல மாறும் நிறை ஏற்படலாம் என்கிறார்கள் விவசாயிகள். இந்த வருடம் பருவ மழை பொய்ததுடன், வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. வரும் காலத்திலும் மழை இல்லாமல் போய் விடும் என இயற்கை தனது அறிகுறிகளை காட்டுகிறதோ? என விவசாயிகள் எண்ணுகிறார்கள்.


