ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக ரம்ஜானை முன்னிட்டு செய்துங்கநல்லூரில் பணிபுரியும் 30 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துல்காதர் தலைமை வகித்தார். பொருளாளர் கரீம் பாஷா முன்னிலை வகித்தார். மருத்துவ அணி செய்யது இபுராகிம், மீரான், அப்துல் கனி, அலியார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் அப்துல்கனி நன்றி கூறினார்.


