தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் பிரபாகரன் (39). மீனவரான இவருக்கு திருணமாக மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தினசரி மதுபோதையில் வீட்டுக்கு செல்வதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதில் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி முள்ளக்காடு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கணேஷ் குமார் (46). இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டினாராம். ஆனால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் வீட்டை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த கணேஷ் குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


