தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் ஏறுவதற்காக வந்த மகளிர் பயணிகள் நீண்ட நேரமாக இருளில் காத்திருந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலில் கடைசி பெட்டி கிழக்குப் பகுதி நடைமேடையில் அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை காலமாக உள்ளதால் இன்று இரவு மகளிர் பெட்டியில் பயணம் செய்வதற்காக மாலை 5 மணியில் இருந்து காத்திருந்தனர். இரவு 7 மணிவரை நடைமேடையில் இருக்கை வசதி இல்லாததால் நின்றுகொண்டே இருந்தனர்.
கீழ் பகுதி ரயில் நிலையத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் அருகில் உள்ள மதுரா கோட்ஸ் மின் வெளிச்சத்தில் மகளிர் பயணிகள் காத்திருந்த சம்பவம் அனுப்ப வந்த உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தூத்துக்குடி இரயில் நிலையத்தில் சரிவர பயணிகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக பயணி காசியம்மாள் என்பவர் கூறுகையில், நம் தொகுதி எம்.பி.,யான கனிமொழி விழாக்கள் நடத்துவதில் ஆர்வமாக உள்ளார். ஆனால் இது போன்ற மத்திய அரசின் துறை சார்ந்த பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


