செக்காரக்குடியில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனும் கூட்டுறவு சங்க தலைவருமான அய்யம்பெருமாள் தலைமை வகித்தார். ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கிளை கழக செயலாளர் சங்கரசுப்பு, கிளை கழக துணை செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் அம்மாவின் புகழை கூட்டுறவு சங்க தலைவரும் முன்னாள் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான அய்யம்பெருமாள் எடுத்து கூறினார்.