கருங்குளம் ஒன்றியத்தில் புதிய பாரத இயக்க ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆலோசனைபடியும், மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி மற்றும் மாவட்ட புதிய பாரத எழுத்தறிவு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் ஆகியோரின் ஆலோசனையின் படியும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தின் குடியிருப்புகளைச் சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு பேச்சுபோட்டியும், தன்னார்வலர்களுக்கு ஸ்லோகன் எழுதுதல் போட்டியும் கருங்குளத்தில் உள்ள கருங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் மரிய ஜெயசீலா தலைமையில் நடந்தது.
இதில் பேச்சுப்போட்டியில் கருங்குளத்தைச் சேர்ந்த வனிதா முதல் பரிசையும், கருங்குளம் முத்தம்மாள் ஜானகி இரண்டாம் பரிசையும், முத்தாலங்குறிச்சி ஜோசப் கென்னடி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
தன்னார்வலர்களுக்கு சுலோகன் போட்டியில் முதல் பரிசை நடுச்செக்காரக்குடி சந்தனமாரியம்மாளும், புளியங்குளம் பிச்சமுத்து இரண்டாம் பரிசும், செய்துங்கநல்லூர் சாபிரா சுல்தானா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை புதியபாரத எழுத்தறிவு இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர்.
போட்டிக்கான நடுவர்களாக இல்லம் தேடி கல்வி ஆசிரியர் தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன்ராஜ், பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர் செல்லப்பா ஆகியோர் செயல்பட்டனர்.


