குரும்பூர் அருகிலுள்ள புதுக்கிராமத்தில் பேவர் பிளாக் சாலையை மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் நமக்கு நாமே திட்டமும்,இயேசு விடு விக்கிறார் புதுவாழ்வு சங்கமும் இணைந்து அங்கமங்கலம் ஊராட்சி புதுக்கிராமத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜனகர், அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், பொறியாளர் வெள்ளபாண்டி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.முன் னதாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியசமூக ஒருங்கிணைப்பாளர் மண த்திஎட்வின் வரவேற்று பேசினார். விழாவில் புதுக்கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


