தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி சங்கரம்மாள் . செட்டிமல்லன் பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு பேச்சியம்மாள் என்ற மகளும், பாண்டித்துரை என்ற மகனும் உள்ளனர். பேச்சியம்மாள் பிகாம் படித்து வருகிறார். பாண்டித்துரை 11ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்த நிலையில் சின்னத்துரை மகள் பேச்சியம்மாள் செட்டிமல்லன்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த டிரைவரான காளிமுத்து என்பவரை காதலித்து வந்துள்ளார். காளிமுத்து வேறு சாதியைச் சேர்ந்தவர். இதனால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்sஇருந்துள்ளது.
இதற்கிடையில் நேற்று மாலை பேச்சியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி காளிமுத்துவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சின்னத்துரை மற்றும் சங்கரம்மாளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். சின்னத்துரை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தனியாக வீட்டில் இருந்த சங்கரம்மாள் நேற்று மாலை சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்தவுடன் அருகில் இருந்தவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் உள்ளவர்கள் சங்கரம்மாள் கணவர் சின்னத்துரைக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவரது போன் கிடைக்கவில்லை.அவர் எங்கே சென்றார் என தகவலும் தெரியவில்லை.
இதற்கிடையில் இன்று காலை சாயர்புரம் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள கோரம்பள்ளத்தினை சேர்ந்த ராஜசிங் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சின்னத்துரை மருந்து குடித்து உயிருககு போராடிகொண்டிருந்தார். போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு 108 ல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைககு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.
மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலப்பு திருமணம் செய்து கொண்டதால் ஊரில் பிரச்சனை ஏற்படும் என்று கருதி இரண்டு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறமிருகக, இறந்த சின்னத்துரை மற்றும் சங்கரம்மாள் உறவினர்கள் இரண்டு பேர் சாவுககு காரணமான சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி வருகிறார்.
இதனால் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.


