தூத்துக்குடியில் சாலையில் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தலைமை காவலரை பொதுமக்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி அன்பு உள்ளங்கள் என்ற இல்லத்தில் இருந்து கடந்த 01.10.24 அன்று சுடலை முத்து (33) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபர் உடல்நிலை சரியில்லாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்று இரவு அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் உள்ளார். இது சம்பந்தமாக தெற்கு காவல் நிலையத்தில் அன்பு உள்ளங்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் செல்வ பெருமாள் முத்தையாபுரம் பகுதியில் சுற்றி திரிந்த அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை இன்று அன்பு உள்ளத்தில் பாதுகாப்போடு கொண்டு சேர்த்தார். எப்படி தலைமை காவலரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


