செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் பிள்ளை மார் சமுதாயத்தின் சார்பில் திருமால் பூஜை நடந்தது. இதையட்டி திருவரங்கசெல்வியம்மன் கோயில் அதிகாலை திறக்கப்பட்டது. பின் மக்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து பால் குடம் எடுக்கும் வைபவம் நடந்தது. கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க சென்று வந்த ஊர்வலம் அம்மன் கோயிலை மீண்டும் வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.தொடர்ந்து அம்மன் சிறப்பு தரிசனம் கொடுத்தார். மாலையில் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்தார். செய்துங்கநல்லூர் ,வி.கோவில்பத்து கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சப்பர பவனி நடந்தது .ஆங்காங்கே பக்தர்கள் காத்திருந்து தேங்காய் பழம் உடைத்து அம்மன் தரிசனம் செய்தனர். அதன் பின் மீண்டும் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிள்ளை மார் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.


