கடந்த ஒரு வருட காலமாக நெல்லை டைம்ஸ் வாசகர்களுடன் பயணித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக பொருநையில் புதைந்த ரகசியங்கள் என்ற தலைப்பில் இதுவரை சொல்லாத விடயங்களை 51 எபிசோட்டில் சொல்லி முடித்துள்ளேன். அதற்கு ஆதரவு அளித்த உங்களுக்கு மிக்க நன்றி. தற்போது மீண்டும் ஆச்சி சொன்ன ஆத்தோர கதைகள் என்ற தலைப்பில் மற்றுமொரு தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன். அதற்கான ஓவியங்களை நண்பர் வள்ளிநாயகம் சிறப்பாக வரைந்து தர ஒப்புக்கொண்டுள்ளார். நல்லதொரு தொடக்கமாய் தற்போது ஒரு வரைபடத்தினையும் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. நெல்லை மொழியில் இந்த தொடலில் வரலாற்றை பேசலாம் என நினைக்கிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவு தேவை. அண்ணாச்சி இசக்கி ராஜன் அவர்கள் பாணி என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் அளவுக்கு சொல்ல முடியுமோ தெரியவில்லை. முயற்சி செய்கிறேன். இந்த அரிய வாய்ப்பை தந்த நெல்லை டைம்ஸ் நிறுவனர் மாலை ராஜா அவர்களுக்கு நண்பரும் பொறுப்பாசிரியருமான தம்பான் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.


