ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
அகழாய்வு பணியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப்பகுதிகள், 3500 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஒரே குழியில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு அடுக்கு மேல் தளத்திலும், இரண்டாவது அடுக்கு 60 மீட்டர் ஆழத்திலும், மூன்றாவது அடுக்கு 1 மீட்டர் ஆழத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் முதுமக்கள் தாழிகளை திறக்கும் போது இன்னும் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.