தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (23.11.2024) இன்று சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை மருத்துவ அலுவலர் டாக்டர்.முத்தமிழ் செல்வி அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள்.
சுகாதார பார்வையாளர் முத்துலக்ஷ்மி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 23 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 24 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிருஷ்டி,
ஆய்வக நுட்பநர்சுபா, செவிலியர் ராமலக்ஷ்மி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் செல்வராணி, முத்துவேல், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


