சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மருக்கு செய்துங்கநல்லூரில் புத்தகம் பரிசளித்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருதை கடந்த 2019ம் ஆண்டு பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை அவரது அலுவலகத்திற்கு வந்து எழுத்தாளர் சோ.தர்மர் சந்தித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சோ.தர்மரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பின்னர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை அவருக்கு பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இசக்கியப்பன், கோபாலகிருஷ்ணன், செல்வி, மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


